உணர்த்தும் குறியீடுகள்

உணர்வுகளின் வெளிப்பாடு
உருவங்களில் தெரிகிறது
குறியீடுகளாக உணர்த்துது
குறுகுறு முகத்தைக் காட்டுது !

ஏளனமாக எடுத்துரைக்க
எதிரொலிக்கும் எண்ணத்தை
முத்தாய்ப்பாக முகபாவத்தில்
வெளிப்படுத்தும் மழலையிது !

பாவனைகள் பலவிதமுண்டு
பரவசமடைபவர் பலருண்டு
ஒவ்வொன்றும் ஒருவிதமிங்கு
ஒப்புக்காகவும் கூறுவதுண்டு !

சுருக்கெழுத்தை மூலமாக்கி
நறுக்கென்று நவின்றிடாது
உள்ளத்தின் உணர்வுகளை
உரைத்திடும் முகங்களிவை !


பழனி குமார்
15.05.2023

எழுதியவர் : பழனி குமார் (17-May-23, 9:31 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 53

மேலே