நடிகை செல்லம்மா

தயாரிப்பாளர்: உங்க பொண்ண கொஞ்சம் வரச்சொல்லுரீங்களா?
நடிகை: நான்தான் நீங்க பார்க்கவேண்டிய பெண், நடிகை செல்லம்மா. போனவாரம்தானே நாம ஸ்டூடியோல பார்த்து பேசினோம்.
தயாரிப்பாளர்: செல்லம்மா, அதுக்குள்ள எப்படி இவ்வளவு வயதானவங்க மாதிரி ஆயிட்டிங்க, சொல்லம்மா?
நடிகை: இப்போதான் நான் தூங்கி எழுந்தேன். மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் இருக்கிறேன். இதையெல்லாம் நீங்க ரொம்ப கண்டுக்கிடாதீங்க.
தயாரிப்பாளர்: செல்லம்மா, உங்களை நான் அன்புடன் செல்லத்தாயீ அப்படீன்னு கூப்பிடவா?
நடிகை: உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி கூப்பிடுங்க. ஆனால் சொன்ன பணத்தை மட்டும் குறைக்காமல் கொடுத்துடுங்க.
தயாரிப்பாளர்: ஆமாம் செல்லம், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
நடிகை: கல்யாணம் என்ன, மூன்று பசங்க இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்: எல்லாரும் என்ன பண்ணுறாங்க?
நடிகை: மூத்த பொண்ணு ஹாலிவுட்ல நடிக்க அமெரிக்கா போயிருக்கா. இரண்டாவது மகள் மும்பைல ஹிந்தி படங்களில் நடித்து வர்ரா.
தயாரிப்பாளர்: அப்போ, மூணாவது பொண்ணு?
நடிகை: நான் நடித்துவரும் உங்கள் படத்தில், என்னோட அம்மாவாக நடிப்பவள் என் மூன்றாவது மகள் முத்துலட்சிமி தான்.
தயாரிப்பாளர்: அப்படியா, ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கணவர் வீட்டில் இருக்கிறாரா?
நடிகை: ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக விஜயவாடா போயிருக்கார். அவர்தான், நம்ப படத்தில் என்னோட ஹீரோவாக நடிக்கும் முத்தையாவின் தாத்தாவாக நடிக்கப்போகிறார்.
தயாரிப்பாளருக்கு லேசாகத் தலை சுற்றுகிறது.
நடிகை: ஏம்மா லட்சுமி, சாருக்கு கொஞ்சம் மயக்கமாக இருக்குன்னு நினைக்கிறன். கொஞ்சம் சூடா காபி போட்டு கொடு.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-May-23, 8:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : nadikai chellamma
பார்வை : 68

மேலே