ஒவ்வொண்ணும் ஒரு கோடி

பைத்தியம் 1: நீ எதனால் பைத்தியம் ஆனாய்?
பைத்தியம் 2: நான் அதிகமாக படித்துவிட்டேன். பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்எஸ், பிஎச்டி, பிகாம், எம்காம், எம்பிஏ, பிஎல், பிஎட், புசிமா, டீசிஎம், பசீமா, பிடெக், பசிமா, டிப்ளமோ உளவியல், ருசிமா, பி ஏ-தமிழ், பி ஏ -ஆங்கிலம், எம் ஏ- இலக்கியம், அப்புறம்..........
பைத்தியம் 1: நிறுத்துடா பைத்தியக்காரா, இவ்வளவும் படிச்சு முடிகிறப்போ, உனக்கு என்ன வயசு?
பைத்தியம் 2: சுமார் நாற்பது வயசு
பைத்தியம் 1: அதுவரைக்கும் ஏதாவது வேலைக்கு போனாயா?
பைத்தியம் 2: இல்லை, வீட்டிலேயேதான் இருந்தேன்.
பைத்தியம் 1: நாற்பது வயசுக்கு அப்புறம் என்ன பண்ணினே?
பைத்தியம் 2: இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டாங்க.
ஆமாம் புதுப்பைத்தியமே , நீ எப்படிடா இங்கு வந்தே?
பைத்தியம் 1: நான் உன்னை மாதிரி ஓவராக படிக்காம, சும்மா ஒரு டிகிரி மட்டும் படிச்சிட்டு ஒரு அரசாங்க நிர்வாகத்தில் வேலை பார்த்தேன். அம்பது வயசு வரைக்கும் பிரச்சினை இல்லை.
பைத்தியம் 2: அப்படீன்னா நீ கல்யாணம் ஆகாத பைத்தியமா?
பைத்தியம் 1: இல்லடா பைத்தியமே, நான் அம்பது வயசுலதான் கல்யாணம் செய்துகொண்டேன்.
பைத்தியம் 2: நீ சரியான கிறுக்கனா இருப்ப போலிருக்கு. எங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் பதினஞ்சு வயசுலேயே கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நீ என்னடானா அம்பதுல கழுத்தை நீட்டியிருக்கே.
பைத்தியம் 1: அட முட்டாளே, நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளு. என் சின்ன வயசு நண்பர்கள் என்னிடம் ' டேய் கழுதை பயலே, இந்த காலத்துல கைல ஒரு கோடி ரூபாய் இல்லைனா, பொண்ணு என்ன, ஒரு நாய் கூட உன்னை கல்யாணம் பண்ணிக்காது' அப்படீன்னாங்க.
பைத்தியம் 2: அட லூசுப்பயலே, அப்புறம் என்ன பண்ணே?
பைத்தியம் 1: டேய் பஞ்சர் டயரு, நான் இருபத்தி அஞ்சு வருஷம் கல்யாணம் கூட பண்ணிக்காம, மங்கு மங்குன்னு உழைச்சு என்னுடைய ஐம்பதாவது வயதில் ஒரு கோடி ரூபாய் சேர்த்து வைத்தேன்.
பைத்தியம் 2: அப்புறம் என்ன கேணப்பயலே, ஜாம் ஜாம்முன்னு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியதுதானே?
பைத்தியம் 1: அவசரப்படாதடா அடிமாடு, நான் இரண்டு வருடங்கள் தேடித்தேடி அலைந்து நல்ல அழகான ஒரு பொண்ணைப்பார்த்து கண்ணாலம் கட்டிகிட்டேன்.
பைத்தியம் 2: அப்புறம் என்னடா பரங்கித்தலையா, இப்ப இந்த இடத்துக்கு எதுக்கு வந்து அட்மிட் ஆயிட்டே?
பைத்தியம் 1: டேய் பைத்தியத்தின் நண்பனே, என்ன நடந்தது தெரியுமா? பொண்ணுக்கு வயசு இருபத்திமூணு. எனக்கு வயசு அம்பத்திரெண்டு. வயசு வித்தியாசம் எவ்வளவு சொல்லு?
பைத்தியம் 2: ஹி ஹி ஹி, நான் அவ்வளவு படிச்சும் கணக்குல கொஞ்சம் வீக்குதான்டா புதுப்பைத்தியமே.
பைத்தியம் 1: இதே கேள்வியைதாண்டா என் பொண்டாட்டி என்னிடத்தில் கேட்டா. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. சரி போனால் போகுது அப்படீன்னுட்டு, என்கூட ஒருமாதம் வாழ்ந்தாள். ஏனோ, தெரியலைடா எனக்கு அவளுடன் சரிசமமாக எதற்குமே ஈடு கொடுக்கமுடியவில்லை.
பைத்தியம் 2: என்னடா சொல்லுறே முட்டாப்பயலே?
பைத்தியம் 1: அவள் என்னோட பேங்க் அக்கௌன்ட் பாஸ்ஒர்ட் கேட்டு வாங்கி கொண்டு அடுத்த ஒரு மாதத்திற்குள் என் பணத்தை எல்லாம் அவள் அக்கவுண்டுக்கு மாற்றிக்கொண்டுவிட்டாள். நான் அவளிடம் ' என் பணத்தை எல்லாம் நீ உன் அக்கவுண்டுல போட்டுக்கினியே. நான் பணத்திற்கு என்ன பண்ண? அவள் சொன்னாள் "நீங்க என்னை பணத்திற்காக கல்யாணம் செய்தீர்களா அல்லது குணத்திற்காக செய்தீர்களா? நான் சொன்னேன் 'ரெண்டும் இல்லை. உன் அழகுக்காகத்தான் '.
பைத்தியம் 2: குருவி மூஞ்சு மாதிரி இருக்கிற உன்னை எப்படிடா ஒரு அழகான பொண்ணு கல்யாணம் செஞ்சிக்கினா?
பைத்தியம் 1: அதுக்கு அப்புறம் என் பொண்டாட்டி அவ ஊருக்கு போயிட்டா. எப்ப கேட்டாலும் அடுத்த வாரம் வாரேன், அடுத்த வாரம் வாரேன், இப்படியே சொல்லிட்டு வராமலேயே இருந்துவிட்டாள்.
பைத்தியம் 2: அட மண்டு, பணத்தை திருப்பித் தந்தாளா?
பைத்தியம் 1: இல்லடா மாங்கா மடையா, அந்த பணத்தை வச்சுதான், அவளது பெற்றோர்கள், இப்போ அவளுக்கு இங்கே வைத்தியம் பார்க்கிறார்கள்.
பைத்தியம் 2: இங்கேன்னா எங்கே, நாம இருக்கிற மனநல மருத்துவமனையிலேயா?
பைத்தியம் 1: ஆமாண்டா என் அரை பைத்தியமே. நீ இருக்கும் அறையின் மேலறையில்தான் அவளும் இருக்கிறாள்.
பைத்தியம் 2: ஐயா, ஜாலி, நான் அவள்கிட்ட போய் கொஞ்சம் பேசிட்டு வரேன்.
பைத்தியம் 1: நீ சரியான விவஸ்தை கெட்ட பைத்தியம்டா, அவளுக்கு அவளுடைய அம்மாவையும் அப்பாவையும்கூட அடையாளம் தெரியவில்லை. என்னையும் அடையாளம் தெரியவில்லை. உன்னிடம் எதுக்குடா அவ பேசப்போறா?
பைத்தியம் 2: டேய் மக்கு, அவ எதுக்கு என்னுடன் பேசணும், நான்தானே அவளிடம் பேசப்போறேன். ஹை ஜாலி, ஹை ஜாலி.
பைத்தியம் 1: அப்போ இனி நானும் உன்னோட பேச மாட்டேன், சூப்பர் ஜாலி, சூப்பர் ஜாலி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-May-23, 7:23 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 73

மேலே