அட எருமை மாடே
செல்லம்மாள் பாட்டி : மீனாட்சி கண்ணு ! மீனாட்சி கண்ணு ! இங்க வாமா !
பேத்தி : சொல்லுங்கள் பாட்டி ! இதோ வந்துட்ட பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : என்ன பண்ற. சாப்டியா !என்ன சாப்ட!
பேத்தி : எஸ் பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : எஸ்ஸா அப்படினு ஒரு சாப்பாடு இருக்கா ? எத்தனை மணிக்கு சாப்ட ?
பேத்தி : அய்யோ பாட்டி பாட்டி !! எஸ் ன்றது ஆமானு அர்த்தம் பாட்டி. நான் நயனுக்கு சாப்ட.
செல்லம்மாள் பாட்டி : நைனாவ ஏண்டி இதுல இழுக்குற. என்ன நீ புதுசா புதுசா ரக ரகமா பேசுற.
பேத்தி : பாட்டிடிடிடிடிடிடிடிடி.....!! ஒன்பது மணிக்கு உண்டேன் போதுமா..
செல்லம்மாள் பாட்டி : இப்பதா காது நல்லா கேக்குற மாதிரி இருக்குது கண்ணு.
பேத்தி : பாட்டி ! தாத்தாகிட்ட ஒரு விஷயம் கேட்ட. அதாவது சின்ன வயசுல குழந்தைகள கன்றுக்குட்டி செல்லக்குட்டி பன்னிக்குட்டினு செல்லமா கூப்புட்றாங்கள அப்படினு. இப்பமட்டும் வளர்ந்தததுக்கு அப்புறம் எருமைமாடு தடிமாடு பன்னினு கூப்பிட்றாங்கனு டவுட்டு கேட்ட பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : என்னது டவுசரா ?
பேத்தி : பாட்டி!! சந்தேகம் கேட்ட பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : தாத்தா என்ன சொன்னார்னு நான் சொல்லட்டுமா ? இப்ப அந்த கன்றுக்குட்டி பன்னிக்குட்டிங்களா பெரிசா வளர்ந்துருக்குள்ள. வளந்ததுக்கு அப்பறமும் கன்றுக்குட்டி பன்னிக்குட்டினு கூப்ட முடியாது இல்ல. அதான் எருமைமாடு தடிமாடுனு கூப்ட்றாங்கனு சொல்லிருப்பாரு !!
பேத்தி : யு ஆர் ய ஜீனியஸ் பாட்டி ! பிரில்லியன்ட் பாட்டி !
செல்லம்மாள் பாட்டி : சீனிய ஜஸ்ல போட்டு குடுக்கனுமா ! நான் புள்ளகுட்டி பெத்தவனு எனக்கு தெரியாதா ! ஒத படுவ கண்ணு !! இந்த இங்கிலிலீ மொழிய வச்சுக்கிட்டு என்ன பண்ற நீ !!
பேத்தி : பாட்டிடிடிடிடி !! குட் பை பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : என்னது கூட்டுல பை விழுந்துடுச்சா அடக்கடவுளே !! ஓடு ஓடு !!
பேத்தி : அம்மா அம்மாமாமாமாமா ! சேவ் மீ !
செல்லம்மாள் பாட்டி : சேமியா வேணுமா !!
பேத்தி : நான் போய் வருகிறேன் பாட்டி.
செல்லம்மாள் பாட்டி : இருக்கட்டும் நல்லது...