குமரிச்சிலை கோட்டம் பேனா எதற்கு
நேரிசை வெண்பா
வள்ளுவனுக் கென்ன வகையுற வித்தரைநீ
கள்ளைக் கொணர்ந்தனை கள்ளனே-- கள்ள
குணம்மறந்த னையோ குடும்பம் மறந்த
குணசீல னாநீ குறும்பு
நேரிசை ஆசிரியப்பா
சுற்றினாய் தினமும் சூறா வளியாய்
சுற்றுப் பயணம் பத்துக் கூட்டம்
சுகமாய்க் காரில் போனாய் பேசினாய்
ஒரேப்பேச் செங்கும் மத்திய அரசின்
குடியி ருப்புகள் திறந்தாய்
குடிகெடுத் தனைதமி ழரின்கலாச் சாரமே
அவாவை அறுக்க சொன்னான் வள்ளுவன்
தவறா தேசேர்த் தாய்பல சொத்து
பிறன்மனை நோக்கல் கூடா வென்றான்
கேட்டனை யில்லை புலாலை தவறென
கேட்டாய் கோழி சப்பை கூடினாய்
தாடியைத் தேடி பின்னே கழன்றாய்
விட்டனை கடவுளின் மறுப்பு இல்லை
வள்ளுவனின் அறத்தையும் அறவேத் தள்ளி
சகுனியாய் புரிந்தனை பலதும் சூழ்ச்சி
வள்ளுவன் உனக்கென்ன உறவு
துள்ளு கிறாயுரை குறளுக் கெழுதியே
நேரிசை வெண்பா
குறளுக் கெதிரிநீ கோட்டமெ தற்கு
அறம்மீறி வள்ளுவர்கு வைத்தாய் -- திறமாய்
குமரிச் சிலைபயன் கூடிலா பேனா
அமர்த்தல் கடலிலற் பம்
...........