என்னவென்று சொல்வது
அவளை நினைக்க நினைக்க ஊறியது கவி வெள்ளம்
ஒன்றும் சொல்ல வினையாமல் மாறினேன் கவிஞனாய்....
ஊற்றாய் ஊற்றியது தமிழ் எழுத்து
அள்ளிய எழுத்தை அல்லி மலர் போல் கோர்த்து
அவளுக்கு கவி மாலை சூட வந்தேன்....
கிள்ளி பார்த்தேன் கனவு இல்லை
அவளை காண்பது நிஜமே...
சொல்லி பார்த்தேன் என் காதலை
பதில் வந்தது !!
அவள் மெல்லிய குரல்
ஓர் பல்லவி சொன்னது
"நானும் "
பூரிப்பில் பாய்ந்து ஓடிய வெள்ளம் அடித்தது என் முகத்தில் ஓர் ஓசையுடன் ....
"அம்மா:எந்திரி எரும நேரம் ஆச்சு"
அவளை கண்டதும் கனவு கூட மெய்யாய் இருந்தது.....!!!
-இந்திரா