அவள்
கண்ணே என்னிடம்
கதைக்காமலே இருந்திருக்கலாம்
என்னுடன்
கதைத்து விட்டு
இப்போது கடந்து
செல்கிறாய்
இதயத்திலும்
ஈரம் கசியுதடி
கதைக்கும் போதெல்லாம்
கவிதையாய் தெரிவித்துவிட்டு
கடந்து செல்லும் போது
நினைவுகளை பரிசளித்து
சென்றாயே
என் நிம்மதியை
பறிகொடுத்து
நீயும் இல்லா
உலகில் நான்
எப்படி தான் வாழ்ந்து விடுவேனோ
என் உயிரே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
