நாசரும் டான்சரும்

நாசரும் டான்சரும்
நாசருக்கு ஒரு டான்சர் மீது ரொம்ப காதல்
ஆயினும் காதலுக்கு கிடைக்கலை ஆன்சர்
நாசர் டான்ஸுக்குப் போக சான்ஸ் வந்தது
டான்சர் டான்ஸை நாசர் அன்று ரசித்தான்

டான்ஸ் ஆனது, தடால்!டான்சர் விழுந்தாள்
நாசர் டான்சருடன் ஆஸ்பத்திரி போனான்
டான்சருக்கு கேன்சர் நாசருக்கு தெரிந்தது
மருத்துவர் கெடு அவளுக்கு மூன்று மாதம்

நாசரின் மனைவி கேன்சரினால் இறந்தாள்
தனிமைக்கு பயந்து டான்சரிடம் போனான்
டான்சருக்கும் கேன்சர், பாவம் தான் நாசர்
பத்துநாட்கள் கழித்து நாசர் மருத்துவரிடம்

மருத்துவர் செய்தார் ரத்தப் பரிசோதனை
டான்சரின் நேசர் நாசருக்கு கெட்ட நேரம்
நாசருக்கும் கான்சர் என்று தெரிய வந்தது
நாசருக்கு நாலு மாதங்களே மீதமிருந்தது

அதிர்ந்து போன டான்சர் மயக்கமுற்றாள்
மயக்கம் தெளிந்து ஆஸ்பத்திரி சென்றாள்
நாசரை கண்டாள், அழுதாள் புலம்பினாள்
நாசர் துடித்தான், டான்சர் கரம் பிடித்தான்

'நீ போய் எனக்கும் இடம் போடு' இது நாசர்
'இல்லை ஒண்ணா போய்டலாம்னு' டான்சர்
மருத்துவர் வந்து இருவரையும் சோதித்தார்
இரு உயிர்களும் மயானத்தில் இணைந்தன

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-May-23, 8:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 52

மேலே