குற்றால குறவஞ்சி

குற்றால குறவஞ்சி....!
--------------------

ஆதவன் உட்புகா அடர்ந்த காடு
அதனுள் ஆர்ப்பரித்து கொட்டும் தேனருவி
வானவரும் வந்து தவம்செய்ய விரும்பும்
மர்மம் நிறைந்த மௌன வனத்துள்

காதலால் கசிந்துருகும் காவியம் ஒன்றை
காட்சிப் படுத்துகிறார் கவி திரிகூட ராசப்பர்.
கண்முன்னே விரியும் நாடக அரங்கேற்றம்
கணப்பொழுதில் நம்மை கவர்ந்தி ழுக்கிறதே!

வானரம் ஒன்று மந்தியை மயக்க
வனம் முழுதும் திரிந்து பழமொன்றை
வாஞ்சையுடன் கொஞ்சி திங்க கொடுக்க
வஞ்சியோ அலட்சியமாய் முகம் திருப்ப

வானரமோ விடாமல் கொஞ்ச கெஞ்ச
போனால் போகிறதென்று கண்ணில் வழிந்த
காதல் நெஞ்சை தயிராய் கடைய
கனியை மெல்ல குரங்காய் கடிக்க

அவ்வூடல் கண்டுமன ஊஞ்சல் மெல்ல
நனைந்து சாரலில் நாட்டியம் ஆட
அற்புதமாய் சிந்திய அப்பழப் பிசிறுகளை
கைகளிலேந்த வானவரங்கே வரிசையில் நிற்க

வீழ்ந்த அருவி எழுச்சியாய் எழும்பி
ரசிக்க வந்த ரவியின் பாதையில்
தெறித்து எங்கும் ஓவியமாய் நனைக்க
ஓடியஏழு புரவிகள்யாவும் வழுக்கி விழுந்தனவாம்.

குற்றால குறவஞ்சி அற்புத சிரபுஞ்சி
கற்பனை வளம் கரைமீறி போனாலும்
சொற்பதம் பொங்கி சொர்க்கத்தை காட்டுதே
குற்றால மலையின் புதையலை புகழுதே!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (3-Jun-23, 6:27 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 51

மேலே