மாற்றி விட்ட சூழல்
மாற்றி விட்ட சூழல்
வெந்து தவிக்கும்
உடல்
சுரக்கும் வியர்வை
ஊற்றுக்களாய்
முகம் முழுவதும்
முத்துக்களாக
கண்கள் இரண்டும்
விழித்து பார்த்தும்
தூரமாய் கானல் நீர்
ஓடுகிறது
மனசுக்குள் வந்து
உட்கார்ந்தது
காரணமில்லா எரிச்சல்
அந்த நேரம்
வானம் எங்கிருந்தோ
அவசரமாய் அழைத்து
வந்த கரும் மேகங்கள்
அதனுடனே அழைத்து
வந்த ஈர காற்று
சூழ்நிலையை மாற்றித்தான்
விட்டது
மனம் முழுக்க
குளுமையாய்