உலக ரத்த தான தினம் குருதிக் கொடை தினம் கவிஞர் இரா இரவி

உலக ரத்த தான தினம் !
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !



------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !

ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !

மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !

சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !

தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !

பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !

புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !

மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !

பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !

அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !

தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !

விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !

இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !

சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !

வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !

தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------


.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (14-Jun-23, 2:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 281

மேலே