வாழ்க்கை

வாழ்க்கை
××××××××××
உழைத்தும் பிடித்தும்
உணவற்ற ஏழைக்கு
உணர்வோடு சோறிட்டால்
உன்னதமாகும் வாழ்வுமே..

வேளை உணவிற்கு
வேலை செய்வோர்க்கு
காலை வேதனை
மாலை இனிமை..

பணத்தில் படுத்தாலும்
மனதில் நிம்மதியும்
கனவின் சுவையும்
கணப்பொழுதும் கிடைக்காதே...

கவலையில்லா நாளும்
உவலயில்லா செல்வத்துடன்
தவளையாக வாழக்கற்றால்
வாழையாக மீண்டெழும் நல்வாழ்வு..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Jun-23, 5:34 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vaazhkkai
பார்வை : 97

மேலே