எழுத்து இணையத்திற்கு வாழ்த்து
எழுத்து இணையம்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
கவிதையாகப் பிறந்தார்
கவிமிகு நாயகர் /
அகிலம் முழுவதும்
அன்னைத் தமிழை /
கவிஞர்கள் எண்ணத்தில்
கவிதையாகத் தோன்றியதை/
இணையங்களில் பதித்து
முத்தமிழ் வளர்த்தவர் /
ஆயிரத்தில் மிகுதியாக
அருந்தமிழ் கவிகளை /
உருவாக்கி இணையங்களில்
உறவாக்கி உயர்ந்தவர்/
பொதிகையில் தோன்றிய
பழந்தமிழை எழுத்து/
இணையத்தில் தமிழ்ப்பாலை
அந்நிருவுநர் ஊட்டினார் /
தமிழ்க் கவிஞர்களுக்கு
தலைமை எழுத்து இணையம் /
கவிஞர்கள் படைப்புகளை
உலகம் அறிந்தே /
தமிழ் வளர்ப்பதில்
தன்னலம் மறந்து /
செம்மொழித் தமிழுக்கு
சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்