படைப்பு

வழுவிலா முழுதாய் முடிவிலா பொருளாய்
ஊழிக்காலத்தில் பொருளெல்லாம் உகந்துண்டு
மீண்டும் ஓர் ஆலிலையில் பாலகனாய்
மிதந்து வந்து பொருளெல்லாம் படைத்தது
அதில் உயிரையும் வைத்து பெரும்
நாடகம் நடத்தும் கண்ணா உந்தன்
கழல் போற்றும் உன்னடியேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Jun-23, 8:50 pm)
Tanglish : PATAIPU
பார்வை : 157

மேலே