பதியிதனின் பாவையுமே பாந்தமுள்ள கயல்விழியாள் - தரவு கொச்சகக் கலிப்பா

பதியிதனின் பாவையுமே பாந்தமுள்ள கயல்விழியாள்!
தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)

கதம்பமணம் வீசுகின்ற கன்னி(த்)தமிழ் வீதியென்பேன்
நதிவைகையும் அலைபாயும் நன்மதுரை மாநகரில்
பதியிதனின் பாவையுமே பாந்தமுள்ள கயல்விழியாள்
மதியுடனே சொக்கனுடன் மதுரையிலே அரசாள்வாள்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-23, 2:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே