உழுத நிலந்தனி லுவப்புடன் பயிர்களு முயிர்க்கும் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

உழுத நிலந்தனி லுவப்புடன் பயிர்களு முயிர்க்கும்;
பழுதாய்க் களைகளும் பாரமாய்த் தோன்றிடு மங்கே!
அழுது புலம்பிடி லகலுமோ வவைகளு மொருங்கே;
எழுந்து முயன்றிடி னேகிடு மவையெலா மொழிந்தே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-23, 8:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே