பெண்ணில் பலவகை - கலிவிருத்தம்
பெண்ணில் பலவகை!
கலிவிருத்தம்
(காய் காய் மா புளிமா)
மயிலென்பேன் ஒருசாயல் மயக்கும் விழியில்;
குயிலென்பேன் ஒருசாயல் கூறும் மொழியில்!
பயிலென்பேன் ஒருவாறு படிக்கும் வயதில்;
எயிலென்பேன் ஒருநோக்கிங் கிருக்குந் தினவில்!
- வ.க.கன்னியப்பன்
பயில் - கற்றுக்கொள்
எயில் – உறுதியான கோட்டை
தினவு – திமிர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
