மண்டியிடும்
இதழ் விரித்த பூக்களும்
இளம் பிஞ்சுகளும்
காய்களோடு
கனிந்த பழங்களும்
பாரபட்சமின்றி
புவியில் விழும்
வீசுகின்ற புயல் காற்றால் ,
வீனாகி சிதையும்
அதுபோல
மரணமெனும் புயல்
மக்களைத் தழுவினால்
மரியாதையை பறிக்கும்
முதுமை,வாலிபம், இளமையென
எதுவும் பார்க்காமல்
வேரோடு அழித்துவிடும்
மரணப்பட்ட உயிர்கள்
மண்ணிடம் மண்டியிடும்