வருமென காத்திருப்பேன்
சற்று உற்று நோக்கிய இரு விழிகள்
என்னை பற்ற வினையும் அவள் விழிகள்
சற்றும் தளராமல் அவள் அழகை செதுக்கிய உளிகள் யாதோ....
தங்கமயிலே தன்னை சிலைவடிக்கும் அழகு அவளிடம்
பெண்மையின் உவமை கண்ட பெண் அழகு அவளிடம்
தாமரை இதழ் கண்டு மொட்டும் புலம்பியது ஊன் உயிரை தாங்கும் நீரில் நீர் எப்படி மிதக்கிராயோ
அவள் தாமரை பாதம் சற்றும் விகிதம் மாறாமல் என் மனதில் பதிய
போதிய இடம் உண்டு
நான் எழுதிய மடல் ஓன்று
அவள் செவியோரம் ஓதும் நாள் ஒன்று
வருமென நாணிய முகம் ஒன்று என்னிடம் உண்டு....
-இந்திரா