பெண்கள் நாட்டில் நலம்பெற வாழவேண்டும்
நாடு செழுத்திட வளம் யாவும் பெற்றிட
நாட்டின் மாதர் நலமுடன் வாழவேண்டும்
நலமுடன் என்றால் நல்லுரிமை எல்லாம்
பெற்று வன்மை செய்யும் கொடியோர்
கைகளில் படாமல் நல்லோர் நிழலில்
இனிதே பெண்கள் வாழவேண்டும் என்றும்
சுய மரியாதை பறிபோகாது வீட்டிற்கும்
நாட்டிற்கும் நலந்தரும் கற்பகத் தருவாய்
நிமிர்ந்து நடைப் போட்டு இனிதே
பெண்கள் வாழ வேண்டும் என்றும்
நாடு செழுத்திட வளம் யாவும் பெற்றிட