மிருதங்கமும் வாழ்க்கையும்
மிருதங்க வாத்தியத்திற்கு பக்கம் இரண்டு
ஒருபக்கம் தாளம் சேர்க்க மற்றோர் பக்கம்
ஸ்வரங்கள் தட்டி ராகஒலி இசைக்க
இரண்டும் இழைந்தால் அபஸ்வரம் இல்லா
சுத்த சுருதி பிழறா மிருதங்க ஒலி
அதுபோல் வாழ்க்கையில் மனைவி கணவன்
இணைந்து இழைந்து இசைந்து வாழ்ந்திட
மண்ணிலே ஸ்வர்கம் காணலாமே