வளையல் சத்தம்

வளையல் சத்தம்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

வளையலின் ஓசையும்
வாசமும் பெண்மையின்
வசீகரத்தை கூடுதலாக்கி
வானவில்லாக அழகாக்கும்

கன்னியவள் கையில்
கலகலக்கும் வளையல்
காளையனை அழைத்து
காதலிக்கத் தூண்டும்

கல்யாணப் பெண்ணின்
கண்ணாடி வளையலும்
சலங்கை சத்தமும்
சங்கமிக்கும் தேன்நிலா

மஞ்சமதில் சினுங்கும்
மங்கையின் வளையல்
மாப்பிள்ளையை அணைத்து
அள்ளச் சொடக்கும்

கருவைச் சுமப்பவளின்
கையில் கலகலக்கும்
ஓசைக்கேட்டு குழந்தையும்
வாய்திறந்து சிரித்திடுமாம்

நாற்று நடும்
நங்கையின் வளையல்
ஓசையில் பூச்சிகள்
ஓடிப்போகும் தீண்டாமல் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Jul-23, 6:03 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : valaiel sattham
பார்வை : 178

மேலே