ஓர் நாள் விடியும்

இருப்பதென்னவோ அரிசி உழக்கு !
இதில் உனக்கும் எனக்கும் என்னடி வழக்கு !!
என் மீது தொடுக்காதே தாக்கு ! - இதை
எடுத்து போய் சோறு ஆக்கு !!


நேத்து வெட்ச மீன் குழம்பு இருக்கு !
தொட்டுக்க கொண்டு வா ஊறுக்காய் தொக்கு !!
பச்ச புள்ள அழுகுதடி பசிக்கு ! - அது
இன்னும் புரியலையா உனக்கு !!


ஊட்டி விடு கொஞ்சம் அதுக்கு ! -அது
உறங்கியதும் மீதி உனக்கு !!


விடியும் என்கிற நம்பிக்கை இருக்கு எனக்கு! -- அதே
நம்பிக்கையை நீயும் உள்நெஞ்சில் பழக்கு!!

பசி என்றும் பழகி போனதடி எனக்கு-- இந்த
பயணம் தானே விதி நமக்கு இட்ட கணக்கு.

எழுதியவர் : நா தியாகராஜன் (3-Jul-23, 6:22 pm)
சேர்த்தது : TPRakshitha
Tanglish : or naal vidiyum
பார்வை : 90

மேலே