எனக்கு பிடித்த ஆசிரியர்

எனக்கு பிடித்த ஆசிரியர்
×××××××××××××××××××××
வறுமை படிக்காதே என்றது - ஒன்பதாம்
வகுப்பில் முதலாண்டில் இடை நின்றேன்
வெறுமை படி முன்னேறு என்றது -ஒன்பதாம்
வகுப்பில் மீண்டும் கால் பதித்தேன்

டென்னிசன் உயர்நிலைப் பள்ளியில் - ஒன்பதாம்
வகுப்பு " அ " ஆ " பிரிவுன்டு
" அ " ஆண்பாலர் மட்டுமே
" ஆ " இருபாலர் உண்டு

அ,ஆ பிரிவை பிரித்த பொழுது
பாக்கியராஜ் வாடேயென முதல் மாணவனாக
அழைத்தே  ஒழுங்காப் படிக்கனும் டே....யென
" ஆ " பிரிவு  ஆசிரியர் அழைத்திடவே

பூக்கும் ரோசாக்கள்  மத்தியில் வண்டாகிட
அழுகு வண்ண மத்தாப்புத் தோட்டத்தில்
அதிசய வண்ணாத்து பூச்சிகள் சிறகு விரித்து
அங்கும் இங்கும் பறந்தன மனதினுள்ளே

வகுப்பு ஆசிரியரே கணக்கு ஆசிரியர்
வகுத்தல் பெருக்கலென அடி கொடுக்க
கூட்டல் கழித்தல் அடையாளங்கள் கைரேகையாக
கூட்டத்திலே கணக்குப் பாடத்தில் முதலிடமானேன்

கணக்குப் பாட தேர்வுத்தாள் தருகையிலே
கதாநாயகன் வகுப்பில் நானே
பாக்ய மதிப்பெண் என்ன என்னவென்று
பங்காளியான மாணவ மாணவியர் மொய்ந்திடுவர்

வகுப்பில் முதல் தர மாணைவனை
பின்னுக்கு தள்ளி முன்னேறுவேன் கணித மதிப்பெண்ணிலே
கணிதப் பாடம் எனக்கு உயிராக
கணித ஆசிரியர் திரு.துரைராஜ் அவர்களே
எனக்கு பிடித்த ஆசிரியர்....

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா .ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Jul-23, 9:11 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 186

மேலே