மூங்கிலும், முள்ளு செடியும்

வண்டல் மண்மேலே
கொண்டல் காற்றுவீச
வலுவாக முளைத்தது மூங்கில் செடி -அத
வம்பிழுக்க வளர்ந்தது முள்ளு செடி.

முன்னேற்றம் காணும் போட்டியடி - அத
முன்மொழிந்தது முள்ளு செடி - நம்மில்
முந்தப்போவது நிச்சயம் நானடி -என்று
சொல்லி சிரிச்சது முள்ளு செடி.

சொன்ன சொல்லு சொன்னபடி
சுறுசுறுப்பா வளர்ந்தது முள்ளு செடி
ஆண்டுகள் மூன்று போனது போனபடி
மூங்கில் அங்குலம் கூட வளருளடி

இறைவா!
இது என்ன கொடுமையென்று
இம்மி அழுதது மூங்கில் செடி.

மூங்கில் செடியின் முனுமுனுப்புக்கு
முன்வந்து நின்றான் இறைவனடி

வேண்டும் உயரம் நீ வளரும்படி - உன்
வேர்களுக்கு தந்தேன் பலமடி!
வேகம் எடுத்து நீ வளர்வாய் என்றே -உன்
வேர்களை காத்தேன் இத்தனை நாளுமடி!

என்னை மறந்து நீ கலங்கி நின்றாய்
ஏனென்ற உண்மை இன்று விளங்கி கொண்டாய்.

போன தடம் தெரியாமல் போனானடி
போனவன் பெயர் தான் இறைவனடி

மூங்கில் எடுத்தது வேகமடி - அதன்
முன் நிக்க முடியாமல் முள்ளு செடி தோற்தடி
குத்தி கிழிக்குது முள்ளு செடி - என்று
மொத்தமாய் வெட்டி எறிந்தனர் ஓரமடி!

மூங்கில் வென்று பாட்டெடுத்து
முழுமையாய் இறைவனை வணங்குதடி!

முந்தி கொண்ட யாரும்
முழுதாய் வாகை சூடவில்லை!

பொறுமை கொண்டதாலே
வாழக்கை புறம் தள்ள போவதுமில்லை

கற்று உணர்ந்தது மூங்கிலடி - இதை
கல்லாதவர் நம்மில் எத்தனை பேரடி.

எழுதியவர் : நா தியாகராஜன் (4-Jul-23, 9:31 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 336

மேலே