இயற்கையை காப்போம்
இயற்கையை காப்போம்
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
சூறையாடும் அரக்கனாக சூறாவளி
கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளம்
பேரழிவை உருவாக்கும் சுனாமி
வஞ்சம் தீர்க்கும் பஞ்சம்
உயிர்களை பலிவாங்கும் புயல்
வெடித்து சிதறும் எரிமலை
சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம்
இயற்கையின் ஒருபக்க கொடுமைகள் !
இயற்கை சூழல் இதயம் இதமளிக்கும்
தென்றல் தீண்டினால் நெஞ்சம் குளிரும்
வளர்ந்த மரங்கள் நிழல்தந்து சுகமாக்கும் மலைகள் நமக்கு கோடை வாசஸ்தலமாகும்
எழிலார்ந்த மலர்கள் விழியை குளிர்விக்கும்
பூக்களின் வாசம் மனதை பூரிப்பாக்கும்
மங்கையர் கூந்தலின் அழகை கூட்டும்
பசுமையை கண்டதும் உற்சாகம் பெருகிடும்
காய்கனிகள் பல்வேறு வழியில் உதவிடும்
இயற்கையின் மறுபக்க பலன்கள். !!!!
இயற்கையை காப்போம்
செயற்கையை தவிர்ப்போம்
இன்பமுடன் வாழ்வோம் !!!
பழனி குமார்
04.07.2023
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
