குற்றங்கள் கூடுவதேனோ

குற்றங்கள் கூடுவதேனோ ?
,≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

பழங்கால கதை பேசி
பலனில்லை
நிகழ்கால செயல்கள் செயலிழக்க செய்கிறது
புழக்கத்தில் இருந்த மொழியோ தேய்கிறது
பழக்கத்தில் பேசும் நடையே
நிலைக்கிறது !

நேர்மை நேர்கோட்டில் பயணித்த காலமது
குறுக்கு வழியில் மாறிவிட்ட
நிலையானது
தவறுகள் நாளும் தலைவிரித்து
ஆடுகிறது
குற்றங்கள் இமயமாக நிமிர்ந்து
நிற்கிறது !

சுட்டிக்காட்ட காரணங்கள் விழிகளில் தெரிகிறது
பழிதீர்க்கும் படலங்கள் தொடரும் காட்சியாகிறது
உறவுக்குள் உரசல் எரிமலையாக வெடிக்கிறது
நட்பில் விரிசல்கள் விரிந்து தூளாகிறது !

மாறுபடும் சாதிமதத்தால் வேறுபடும் மனங்கள்
விவாதமாக ஆரம்பித்து குற்றமாக மாறுகிறது
சமரசம் பேசாமல் சாமரம்
வீசப்படுகிறது
கலவரம் எழுகின்ற நிலையே உருவாகிறது !

மாறாத நெஞ்சங்கள் மண்ணில் அதிகம்
மனங்கள் மாறாவரை குற்றங்கள் குறையாது
மனிதர்கள் என்றால் ஓரினம் ஒரேசாதி
மதங்கள் மறைந்து மனிதம் தழைக்கட்டும் !

மொழி கடந்து வழியொன்று
காண்க
இனம் மறந்து இணைந்த மக்களாகுக
சாதி ஒழித்து சச்சரவை மறந்திடுக
ஒற்றுமை நிலைக்க வேற்றுமை அழித்திடுக !


பழனி குமார்
05.07.2023

எழுதியவர் : பழனி குமார் (5-Jul-23, 9:14 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 38

மேலே