அறிவுரை அல்ல வேண்டுகோள்

கனவு காண்கின்ற
காளைகளே கேளீர் !
சரிவு என்பது சாதிப்பதற்கு .
தடையில்லை !
முன்னேற்றம் காண
முதல் வழிகாட்டி !
முயற்சி செய்தால்
வானமும் நம்வசம் !
கீழிருந்து பார்த்தால்.
மலை உயரம் !
உச்சிக்கு சென்றால்
மலை நம் காலடியில் !
தோல்வியை நினையாது
வெற்றிக்கு வழிதேடு !
சிந்திக்க தொடங்கு
சிந்தை தெளிவாகும் !
மீண்டும் திரும்பாது
இளமைக் காலம் !
சுயமாக சிந்தித்தால்
தடைக்கல்லும் படியாகும் !
சலனங்களை வீழ்த்திடு
பாதையை வகுத்திடு !
உதவுபவரை உறவாக்கு
தீயவரை விட்டொழி !
சாதனை இலக்கானால்
போதனை தேவையில்லை !
தீண்டுவது தீயானாலும்
அறிவால் அணைத்திடு !
அனுபவத்தை அலசிடு
ஆற்றலை வளர்த்திடு !
அறிவுரையாக ஒதுக்காதே
வேண்டுகோளாக ஏற்றிடு !


பழனி குமார்
07.07.2023

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-23, 9:23 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 82

மேலே