கலாமுக்கு ஒரு கவிதாஞ்சலி
மேதகு மகனே! மேதகு மகனே!!
சீர்மிகு சிந்தனை எம்மில் விதைத்த மேதகு மகனே!
ஊன் தேய நீ கொண்ட உழைப்பு முடிந்ததென்று
நெடு உறக்கம் கொண்டாயோ வங்க கரையோரம்
தவம் நூறு கொண்டாளே பாரத தாய்
(ராமேஸ்)வரம் கொண்டு வந்ததே அய்யா உன்னை இங்கு
எங்கள் அணுவில் கலந்து விட்ட அணு விஞ்ஞானியே!
பாடம் நடுத்துபவர் பல கோடி உண்டு இங்கு - தன்
வாழ்க்கையே பாடமாக்கி போனாயே நீ இங்கு
ஆடம்பரங்களுக்குள் ஆட்படாதவன் அய்யா நீ!
மரபு வேலிகளை மறுதலித்தவன் அய்யா நீ !
சிறகு கொண்டு உன் ஆவி பறந்தாலும்
அது கொளுத்திய அக்னி என்றும் எங்களில் கழன்று சுடர் விடும்
அது சத்தியம்!