புழுதி காற்றும் பூ மழையாகும்

புழுதி காற்றும் பூ மழையாகும் !
**********************************

புழுதி காற்றில் சிக்கித் தவிக்கும் ஒருவனாக
குடும்ப சூழலால் வறுமை
எனும் சூறைக்காற்றில்
சுழன்று வெறுமையின்
எல்லையில் நிற்கிறவன்
நெஞ்சில் புழுக்கம் நிறைந்து
வாழ்க்கையின் விளிம்பில்
இருந்து கொண்டு அடுத்து
ஏதும் செய்திட முடியாத
நேரத்தில் சிந்திக்க வேண்டிய காலத்தை மறந்து வாழ்வின்
இறுதிகட்டமாக நினைத்து தற்கொலை ஒன்றே முடிவென
எண்ணி முடிவெடுக்கும்
அசாதாரண சூழ்நிலையில்
எதையும் வெல்லலாம் என்று
தோன்றினால் முடிவை மாற்றி
சாதிக்கலாம் !

எந்த ஒரு சோகத்தையும்
சாகசமாக மாற்றிட முடியும் !
எதையும் எதிர்த்து நின்று
போராடினால் வெற்றியும்
பெறலாம் !

முன்னோர் கூறியதும் நம் கண்முன்னே நிகழ்வதும் இதுதான் ! முயன்றால் வெற்றி நிச்சயம் !

வென்றால் புழுதி காற்றும்
பூ மழையாகும் !


பழனி குமார்
02.07.2023

எழுதியவர் : பழனி குமார் (2-Jul-23, 7:33 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 36

மேலே