யாவரும் மௌனியரே
யாவரும் மௌனியரே!!
இங்கு
கேள்வியும்
கேட்கும் சூழலும் தான்
மௌனம் கொள்ள செய்கிறது
உறுபொருள் கேட்டால்
உறவுகள் மௌனி!
ஊழல் பற்றி கேட்டால்
அரசியல்வாதி மௌனி!
கூடா நட்பு
குறித்து கேட்டால்
குடும்ப தலைவன் மௌனி!
தேர்வு மதிப்பெண் கேட்டால்
தேர்வுறா(த) மாணவன் மௌனி!
நகர பேருந்தில்
சில்லறை கேட்டால்
நடத்துனர் மௌனி!
பள்ளி கட்டணத்தில்
பாதியை சொன்னாலும்
பாரம் தாங்கா(த)
பாமர குடும்பங்கள் மௌனி!
வைத்த நகைக்கு
வட்டி கட்ட சொன்ன
வறுமை கணவன்
வகையறியா(த) மௌனி!
வத்த குழம்பு - சுவை
வற்றி போனால்
கத்தல் கொள்ளும் கணவனிடம்
மனையாளும் மௌனி!
பிறந்தநாள் பரிசு கேட்கும்
பிள்ளையின் முன்பு
பிழைப்பறியா(த)
தகப்பனும் மௌனி!
ஊதிய உயர்வு கேட்கும்
உத்தம தொழிலாளிக்கு
முதலாளியும் மௌனி!
ஊமையாய் பிறக்கும் பிள்ளை
எந்நாளுமே மௌனி!
உலகம் இப்படி உழன்றால்
உய்வது எந்நாள் என்பதை
நீயும் கவனி!