சிற்பிகளின் பாடம் சிற்பங்களின் வேதம்

இந்திரன் சபையில் இல்லாதது
பிரம்மன் ஃப்ரண்ட்லியா செய்தது
மன்மதன் தேசத்தில் மலர்ந்தது...

பூக்களை விடவும்
கவனம் அதிகம் எடுத்துச்
செய்த பூங்கொத்து..

அசையும் பொருட்களில்
இது அபூர்வ தயாரிப்பு...
ஆட்களின் கண்களை
அதிகம் கவரும் கண்கள்
கொண்ட படைப்பு...

பிரம்மன்... அவன்
வள்ளலும் இல்லை
கஞ்சனும் இல்லை
ஆனால் நல்ல கலைஞன்...

வையகத்தில் எந்த மொழி
தெரிந்த சிற்பிகளுக்கும்
இவள் பாடம்...
சிற்பங்களும் கண்
விரிக்கும் அற்புதம்
இதயங்களை இனிமையாக்கும்
அரிய வேதம்...

ஓரப் புன்னகை
காந்தப் பார்வை
கார்குழல்.. சங்குக் கழுத்து..
வில் ஒத்த புருவம்...
நேற்று இன்றைய இமயம்..
நாளை கொண்டாடும் வசீகரம்

இவள் பெயர் தெரியவில்லை
தெரிந்தாலும் இவளை
விட அது நன்றாக
இருக்கப் போவதில்லை..

🌹🌷🪷👍😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Jul-23, 7:43 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 138

மேலே