காவாலா தமன்னா
தமன்னா ஆட்ட அழகில்
காவாலா பாட்டை
படம் பிடித்து விட்டு
சிச்சுவேஷனைத் தேடிக்
கொண்டிருப்பதாய்க் கேள்வி..
தமன்னா எனும் தென்றல்
சிறிது நேரம் சூறாவளி
ஆனதில் இதயங்கள் பறந்தன
எடை கூடினாலும்
நூலிடை கூடாத
வித்தை கற்றவள்..
வாழ்வில் ஒரு பகுதியை
ஆட்டத்துக்கு அர்ப்பணித்தவள்..
சமீப காலங்களில்
நடப்பதை விட ஆடலுக்கு
கால்களை அதிகம்
பயன்படுத்துபவள் இவள்
என புள்ளி விவரம்
ஒன்று கூறுகிறது...
ஆட்டத்தில்
இன்னொரு பரிமாணம்
தோற்றத்தில்
இன்னொரு பரிணாமம்..
நூறு ரூபாய் டிக்கெட்டில்
ரசிகர்களுக்கு வெகுமானம்..
மானாட மயிலாட
பதங்கள் இனி
தமன்னா ஆட ரஜினி ஆட
என மாறும்...
காவாலா பாடலில்
கூந்தலை விரித்துப் போட்டு
ரசிக மனங்களை
அள்ளி முடிகிறாள் தமன்னா..
பாடலாசிரியரின் பேனாவோடு
தமன்னாவின் கண்களும்
சேர்ந்து எழுதுகின்றன
காவாலா கவிதை...
தமன்னா ஆடிய ஆட்டங்களில்
அதிக கலோரிகள் செலவழித்த
ஆட்டம்.. அனிருத் போட்ட
இந்தப் பாட்டிற்காகத்தான்
என்பதை வேர்வைகள் சொல்லும்..
ஜெயிக்கப்போகும் ஜெயிலரில்
ஜெயிக்கப் போவது எது?
ரஜினியின் ஸ்டைலா
தமன்னாவின் ஆடலா..
காண்க வெள்ளித் திரையில்..
ஊட்டிக் குளிரில் கிச்சனில்
இருந்து வரும் ஆவி பறக்கும்
காபி கைக்கு வர
சூடு குறைந்து இருக்கும்..
ஆனால் தமன்னா காவாலாவிற்கு
ஆட்டம் போடும் ஏசி
தியேட்டர் சூடு பறக்கும்..
தமன்னாவிற்கு
வயது போய்க்கொண்டே
இருந்தாலும் பரவாயில்லை..
எந்தக் காலத்திலும்
இந்தப் பாட்டில்
இப்படியேதான் இருப்பாள்...
தமன்னா...
இளைய வயதில் காட்டாத
வேகம் இப்போது காட்டுகிறாள்..
ரசிக வீணைகளை
ரிமோட்டில் மீட்டுகிறாள்...
🌹🌷🪷😃
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
