ராஜபெருமாள் 150723
இனிமையானது வலிமையானது
அது ராஜபெருமாளின் ராஜ்ஜியம்
நிறைய பேருடன் நட்பு... அது
ராஜபெருமாளுக்கு சாத்தியம்..
தத்தம் தனித்துவம் விலக்கி
ராஜபெருமாளுக்கு உகந்த
மாதிரி நண்பர்களை நட்பாட
வைப்பது ராஜபெருமாளின் வியூகம்
அமைதியான நதியாய் அவன்
வாழ்க்கைப் பயணம்...
வற்றாத அந்த அன்பு நதியில்
நட்பெனும் ஓடங்கள்
விதவிதமாய் பயணிக்கும்..
எல்லாம் தெரிந்து கொண்டு
எதுவுமே தெரியாதது
போல் இருப்பான்... வாழ்வைத்
தன் எளிமையால் ஜெயிப்பான்
செய்திகளை விரைவில் தருவது
தினத்தந்தி.. அது
ராஜபெருமாள் வாட்ஸ்அப்
வருவதற்கு முந்தி...
செய்திகள் இவனை நாடிவரும்
இவனிடமிருந்து செய்திகள்
பிறருக்கு ஓடி வரும்.. இவனுடன்
தொடர்பில் உள்ளவர்களுக்கு
பத்திரிகைச் செலவு மிஞ்சும்...
சூரியன் இவனைக்
கேட்டுத்தான் எழும் விழும்..
வளர்பிறையா தேய்பிறையா
பௌர்ணமியா அமாவாசையா
சந்திரன் இவன் செய்திகள் பார்த்து
சரிபார்த்துக் கொள்ளும்...
நண்பன் ராஜ பெருமாளுக்கு
வசந்த வாழ்த்துக்கள் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு
வளங்கள் யாவும் பெற்று...
🌹🌷🪷👏👍😃