கம்பர்
கம்பர்
××××××
கம்பரே தமிழென கவிஞர் புகளுரைக்க/
நெம்புகோல் யானார் நவீனப் பாவலர்க்கே
அம்பாக எய்திடும் அறமதை படைத்தே/
வேம்பாக மருந்தானார் வேண்டாத/ செயலுக்கே/
மனதாலும் பிற மகளிரை நினையேனென/
மனைவி சீதையிடம் மணவாளன் கூறுவதாக/
இனத்தின் பண்பாட்டை இனிமையான உரையடலாக/
தனக்கானக் கோணத்திலே தரமாகப் பாடினாரே/
குகனதுப் பாத்திரத்தில் கருமை பொருந்திய/
தேக அழகனெனத் தேனாக எடுத்துரைத்து/
ஏக பத்தினியை எள்ளவும் கம்பன்/
தகாத வர்ணனையை தராதது ஓழுக்கமே/
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

