கொண்டாடிடும் என்மக்கள் குலவிளக் கென்பேன் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(தேமாங்கனி காய் விளம் தேமா)
கண்ணின்மொழி என்னவென்று கருத்துடன் சொன்னார்
பெண்ணின்மொழி என்னவென்று பேதையீர் சொல்வீர்
கண்கூடிடும் என்னாசை கனிவுடன் சொன்னேன்
கொண்டாடிடும் என்மக்கள் குலவிளக் கென்பேன்!
- வ.க.கன்னியப்பன்
குறிப்பு:
கலிவிருத்தம்
அடிக்கு நான்கு சீர் வீதம் நான்கடிகள்;
இந்தப் பாட்டில் முதல் சீர் நான்கடிகளிலும் ஒரே வகையான கனிச்சீர்;
இரண்டாம் சீர் காய்ச்சீர் நான்கடிகளிலும் - எவ்வகையும் இருக்கலாம்; ஒரே வகையாய் இருந்தால் சிறப்பு;
மூன்றாம் சீர் விளச்சீர் நான்கடிகளிலும் - எவ்வகையும் (கூவிளம், கருவிளம்) இருக்கலாம்; ஒரே வகையாய் இருந்தால் சிறப்பு;
நான்காம் சீர் மாச்சீர் நான்கடிகளிலும் - எவ்வகையும் (தேமா, புளிமா) இருக்கலாம்; ஒரே வகையாய் இருந்தால் சிறப்பு;