யாப்பெனும் பூமகளைப் போற்று கலித்துறை
யாப்பெனும் பூமகளைப் போற்று (கலித்துறை)
***"***
எதுகை யிலாகவி ஏற்குமோ யாப்பதும் மோனை
யதுவு மழகினி லற்புதம் பாவுநற் பாவில்
முதுகி லடிப்பதோ மூத்தவ ளாந்தமிழ் சோர
புதுமை யளிப்பிலும் பூமகள் யாப்பினைப் போற்று !
*******
(மருத்துவர் வ. க. கன்னி யப்பன் ஐயா அவர்கள் கொடுத்த வாய்ப்பாட்டு படி
இப் புனைவு)
(கலித்துறை)
1) நான்கு அடிகள்
2) ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள்
3) 1 மற்றும் 3 ம் சீர்களில் மோனை
4) அனைத்து அடிகளிலும் முதற் சீர் ஒரேவிதமான மா ச்சீர்
5) அனைத்து அடிகளிலும் ஐந்தாம் சீரில்
ஒரேவிதமான மா ச்சீர்
6) 2 3 4 ம் சீர்களில் ஒரேவிதமான விளச் சீர்