முத்தான சீர்தனையே முதற்சீராய் வைத்துவிட்டால் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 4)

முத்தான சீர்தனையே முதற்சீராய் வைத்துவிட்டால்
சத்தான கருத்தினையும் சார்ந்தங்கே வைத்திடுவீர்!
பித்தேறிப் போகுமுன்னே பிரமனையே கூப்பிடுவீர்;
வித்தாரக் கவிதனையே வேண்டியிங்குச் செய்திடவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-23, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே