இலக்கியம் பேசிட எந்தமிழ் மொழியே - நிலைமண்டில ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
சிலிர்த்திட வைக்குஞ் செந்தமிழ்த் தென்றல்
இலக்கியம் பேசிட எந்தமிழ் மொழியே!
தமிழைக் கற்றுத் தலையுந் தூக்கி
நிமிர்ந்தே நடப்போம் நெஞ்சுக்கு நீதி!
நெஞ்சினில் உளதாம் நீள்தமிழ் என்னுள்
தஞ்ச மடைந்தேன் தமிழே தாயே!
- வ.க.கன்னியப்பன்