அரவணைப்புடன் ஆறுதல்

எப்படி எழுத..!!
எதைக் கொண்டுணர்த்த..!!

காயப் படுத்த பலர் இருந்தும்
ஆறுதல் சொல்ல சிலர் இருந்தும்
அரவணைப்புடன் ஆறுதல் சொல்ல
நீ ஒருத்தி..!!
உன்னால் மட்டுமே முடியுதடி…!

என் அன்பே
வார்த்தைகள் போதவில்லை என்பதாலோ
எனை உன் குரல் கொண்டு
வருடி விட்டாய் தேனிசைத் தென்றலாய்

சத்தியமாய் சொல்கின்றேன் சகியே
நித்தமும் உன் குரலிசை கேட்க
கோடி தவமிருந்தும் கிடைக்கா
உன் இனிமையான இதமான வரிகளது

நாளை எல்லாம் நல்லபடியாக
மாறிவிடும் என்று நீ சொன்னது
“நம்பிக்கை”
மாறவில்லை என்றாலும்
சமாளித்து விடலாம் என்பது
என் “தன்னம்பிக்கை”

கண்டிப்பாய் வாழ்க்கை
நட்பால் அரண் செய்யப்பட வேண்டும்
வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி
நேசிப்பதும் நேசிக்கப்படுவதுமே

இத்தனைக்கும் எனக்காய் ஆறுதல்
அளித்த உந்தன் அன்பானது
என் வாழ்நாள் தேடலில்
கிடைத்த மிகச் சிறந்த பரிசு
நினைத்தாலும் “ப்ளொக்”
செய்ய முடியா
உன் இதயமது…!!!
☺️

எழுதியவர் : கியாஸ் கலீல் (11-Jul-23, 5:10 pm)
சேர்த்தது : கியாஸ் கலீல்
பார்வை : 98

மேலே