முதுமையில் தனிமை முற்றிலும் கொடுமை

முதுமையில் தனிமை முற்றிலும் கொடுமை
&&&&&&&&&&&&&&&&&&&

வயிற்றில் சுமந்து
வலியில் பெற்றவளை
பசியால் வீதியில்
பரிதபிக்க விடலாமா

ஆல விருதுகள்
அனைத்தும் மரத்தை
தாங்கிப் பிடித்து
தலைமுறைக்கும் வாழ்கிறது

மூளையற்ற மரமே
முதியோரைத் தாங்கி
விழுதுகள் வேரூன்றி
விருட்சமாகக் காக்கிறது

மூளையோடு இருக்கும்
மனிதன் மனிதமற்றும்
ஆறறிவு மிருகமாக
அன்பு அற்றும்

மடியில் சுமந்தவளை
முதிர்ந்த வயதில்
பட்ட மரமாக
பாசம் காட்டாமல்

வெட்டி முதியோர்
வசிக்கும் இல்லத்தில்
வீசி எறிவதும்
வகையானச் செயலோ

பிள்ளைப் பேறு
பாசத்தை இழப்பதிற்கில்லை
பாடையில் போகும்வரை
பாசத்தில் மிதப்பதற்கு

முதுமையில் தனிமை
முற்றிலும் கொடுமை
முதியோரைக் காப்பதே
இளையோர் கடமை

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Jul-23, 5:52 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 84

மேலே