வாழ நேரும்

புல்லு போட்டு வளர்த்த பசு
போட்ட புல்லுக்கு ஏற்றார் போல்
பால் கொடுக்குதா என்று
பார்க்கும் பெரியவர்,
கஞ்சத்தனம் உள்ளவர்,
கல்லு, முள்ளு, வெய்யில்
இல்லாத இடங்களில் செருப்பை
அணியாமல் கையில் எடுத்து செல்பவர்

வயதான தம்பதியர்
வீட்டு சாமான்கள் வாங்கி வர
வேலையாளைத் தேடினர் ,
மூன்று வேளை சாப்பாடும்
முந்நூரு ரூபாய் சம்பளமும்,
இருக்க இடமும் கேட்டதால்
முகம் சுளித்தார் பெரியவர்

தான் கஞ்சனாக இருந்து
தானும் அநுபவிக்காமல்
அடுத்தவருக்கும் உதவாமல்
வாழ நினைப்பவர்களுக்கு
வாழ்வில் மகிழ்வும், மன நிறைவும்
உறவும், நட்புமின்றி
வேதனையோடு வாழ நேரும்

எழுதியவர் : கோ. கணபதி. (12-Jul-23, 3:50 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vaazha nerum
பார்வை : 33

மேலே