நல்லது என்றார்
வளைவுகள் நிறைந்த
பாதையில் ஓட்டுனர்
பேருந்தை ஓட்டிச் சென்றபோது
பேருந்திலுள்ள இளைஞர்கள்
ஆட்டம் , பாட்டத்துடன்
ஆரவாரத்தோடு குரலெழுப்பி
ஆடி மகிழ்ந்தனர்
அப்போது ஓட்டுனர்
இன்னும் சிறு தூரத்தில்
ஆபத்தான வளைவு
பாதை இருப்பதால்
ஆட்டத்தை நிறுத்திவிட்டு
அமைதியாக இருக்கையில்
அமரச் சொன்னார்
இருக்கையில் எல்லோரும்
அமைதியாக அமர்ந்ததைக் கண்டு
ஓட்டுனர் நிம்மதியடைந்தார் .
மேலும் சொன்னார்
பிறந்த நாள் நமக்கு தெரியும்,
இறக்கும் நாள் எப்போதென்று
எவருக்கு தெரியுமென்றார் ?
மரணம் திருடனைப்போல
முன்னறிவுப்பு இல்லாமல்
வரும் என்பதால்—நாம்
ஆண்டவனை வேண்டி
ஆன்மாவைக் காப்போம்
அதுதான் நம் அனைவருக்கும்
நல்லது என்றார் ஓட்டுனர்