பூஜைக்கு ஒரு பூ

பூஜைக்கு ஒரு பூ
பூ தட்டுடன் வந்தது.
கண்டதும் காதல் பூ
பூத்தது எந்தன் மனதில்.
ஒரு சந்தேகம்
பூ தட்டை தாங்குமா
உன் பூந்தேகம்?
உன் பூங்கரங்கள்
தீண்டுவதால் அந்த
பூச்சரம் கோபப்பட போகிறது.
என்னைவிட மென்மை
இவளுக்கு
எங்கிருந்து கிடைத்ததென்று?
பூவே மெல்ல நட
பூமாதேவி உன்னை தாங்கிட
பூத்து கிடக்கிறாள்
உன் பூம்பாதம்
நோகக்கூடாதென்று.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Jul-23, 8:18 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : poojaikku oru poo
பார்வை : 104

மேலே