கைத்தலம் பற்றி

#கைத்தலம் பற்றி
கைதியானேன் மொத்தத்திலே/
#மொத்தத்திலே செந்தமிழ்
மொழிபோலேக் கொத்தாகி/

#கொத்தாகி உன்மனதில்
கொடியாகிப் புத்தானேன்/
#புத்தானேன் புனிதனானேன்
புத்தராகச் சுத்தமானேன்/

#சுத்தமானேன் ஒன்றினைந்தோம்
சுந்தரியுன் சித்தத்தாலே/
#சித்தத்தாலே உழைத்து
சிகரமாவோம் புத்தியாலே/

#புத்தியாலே இருவரும்
புரியாமை சாத்தியமில்லை/
#சாத்தியமில்லை பிரிவதற்கு
சமதானமாவோம் சத்தமின்றி/

# சத்தமின்றி இனிமையாக
கலந்துயுரையாடி புத்தாண்டு/
#புத்தாண்டுகள் பலகாண
புகலிடம் கைத்தலம்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jul-23, 6:34 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 59

மேலே