நீல விழியாள் நீயுமே வந்தாய் காதலில்
மேலைத் தென்றல் மேனியில் மெல்ல வீசிட
மாலை நிலவு மௌனமாய் காதல் பேசிட
சோலைப் பூக்கள் தேனிதழ் விரித்து மலர்ந்திட
நீல விழியாள் நீயுமே வந்தாய் காதலில்
மேலைத் தென்றல் மேனிதொட்டுச் செல்ல
மாலை நிலவு மௌனமாய்கா தல்பேச
சோலைப் பூக்கள் தேனிதழ் விரித்திட
நீல விழியாள் நீவந்தாய் காதலில்
மேலை இளந்தென்றல் மேனியில் மெல்லவீச
மாலை நிலாவந்து மௌனமாய்கா தல்பேச
சோலை மலர்களும் தேனிதழ் கள்விரிக்க
நீலவிழி யாள்வந்தாய் நீ
மேலை இளந்தென்றல் மேனியில் மெல்லவீச
மாலை நிலாவர மௌனமாய் --நூலிடையே
சோலை மலர்களும் தேனிதழ் கள்விரிக்க
நீலவிழி யாள்வந்தாய் நீ