கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை
கட்டி வயல்
வழி போறபுள்ள
வண்டாக என்னை
இழுத்து பாதை
மாற்றி விட்டபுள்ள
ரெண்டான என்
மனச ஒன்றாக
மாற்றுப் புள்ள
புத்தி எல்லாம்
கெட்டுப் போச்சு
உள்ளம் எல்லாம்
பட்டாம்பூச்சி உன்
நெனப்பே ஏக்கமாச்சு
வைகாசி வந்தாச்சு
வாடிப்புள்ள மாலைமாத்த!

எழுதியவர் : இதயவன் (15-Jul-23, 4:21 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 353

மேலே