காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 8

விஸ்வரூபம்



வெறுமை மனதைக் கவ்வ அவனைப் பார்த்தபடி நின்றவள் மனதில் தோன்றிய இனம் புரியாத வலி கண்ணீராக வழிந்தோடியது.


அந்தக் குழந்தையை பற்றிய அவளுடைய அபிப்பிராயம் என்ன என்று நிதானித்து கேட்கும் பொறுமை கூட அவனிடம் இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இவள் முன்பே அவனை காதலிக்கவில்லை என்றாலும் அவனுடைய புகைப்படத்தை எப்பொழுது முதல் முறையாக பார்த்தாளோ அந்த நிமிடத்தில் இருந்து ரகுராமன், இவள் இதயத்தில் நிரந்தரமாக வசித்துக் கொண்டு இருப்பது இவள் மட்டும் அறிந்த உண்மை.


அடர்ந்த காட்டில் ஆழ்ந்த இருட்டில் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாள் திலோத்தமா.


முசு முசு என்று வந்த அழுகையை ஆழ்ந்த மூச்சை நன்றாக இழுத்து மனதை சமன் படுத்தினாள். அழுதால் மன தைரியம் குறைந்து பிரச்சினை பெரிதாக தெரியும் என்று அவ்வப்போது ஆயாம்மா கூறும் அறிவுரை நினைவில் வந்ததும் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.


இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முடிவு செய்தாள். அதன்படி இன்ஸ்பெக்டரிடம் சென்று குழந்தையை அதன் தாய் சரியாகவும் வரை தானே பார்த்துக் கொள்ளப் போவதாக அறிவித்தாள்.


அவளுடைய தோரணையில் இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் அசந்து நின்றார். பின் அவள் தலையில் பெரிய கல்லாக தூக்கி போட்டார்.


அதாவது கல்லைப் போடுவது போல திலோத்தமாவின் சர்வமும் நடுங்கும் படியான ஒரு செய்தியை அவளிடம் கூறினார்.


என்னம்மா நீ அந்தப் பொண்ணு அடிபட்டு கொஞ்சம் நேரத்திலேயே செத்துப் போச்சே, பின்ன எங்க சரியாகி வர்றது என்றார்.


திலோத்தமா நிலைதடுமாறி ரோட்டில் ஓர் ஓரமாக அந்தக் குழந்தையுடன் அமர்ந்து விட்டாள்.


அவளின் தடுமாற்றத்தை கண்டு அந்த காக்கி சட்டையின் இதயத்திலும் ஈரம் பிறந்தது.


தங்கு தடை இன்றி அவள் விழிகளில் நீர் பெருகியது. அழுதுகொண்டே குழந்தையை பார்த்தாள், அது வரவேண்டிய இடத்தில் வந்து சேர்ந்த நிம்மதியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.


அவள் விழிகளில் வழிந்த நீரை கண்டு ஒரு பெருமூச்சுடன், இங்க பாரும்மா நீ எவ்வளவு அழுதாலும் என்னால் இந்த குழந்தையை உங்கிட்ட இருக்க அனுமதிக்க முடியாது ஏன்னா எனக்கே அந்த அதிகாரம் கிடையாது.


சட்டப்படி நாங்க இந்த மாதிரி கேஸில் குழந்தையை ஹோமுக்கு தான் அனுப்ப வேண்டும் எனக்கு வேற வழி இல்ல.


நீங்க யாராவது பெரிய ஆட்கள் சிபாரிசு இருந்தா முயற்சி செய்து பாருங்க என்றார்.


ஒரு முடிவுடன் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.


ஃபோன் எடுத்து அவள் தந்தையின் நண்பரான கமிஷனர் அங்கிலை தொடர்பு கொண்டு சூழ்நிலையைப் பற்றி தெளிவாக கூறினாள்.


அவரும் அவளுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் திலோத்தமா குழந்தையை ஹோமுக்கு அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியின்றி அவர் திலோத்தமாவின் தந்தையை தொடர்பு கொண்டார்.




சந்திப்போம்......

எழுதியவர் : கவிபாரதீ (21-Jul-23, 9:40 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 59

மேலே