அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்

அம்மா என்றால் மூச்சு
அம்மா என்றால் தமிழ் பேச்சு
அம்மா என்றால் அறிவு
அம்மா என்றால் பரிவு
அம்மா என்றால் அன்பு
அம்மா என்றால் பண்பு
அம்மா என்றால் சக்தி
அம்மா என்றால் பக்தி
அம்மா என்றால் அரவணைப்பு
அம்மா என்றால் புனரமைப்பு
அம்மா என்றால் பசிபோக்கி
அம்மா என்றால் பயம் நீக்கி
அம்மா என்றால் முத்தம்
அம்மா என்றால் பரிசுத்தம்
அம்மா என்றால் தியாகம்
அம்மா என்றால் வாழ்க்கையின் வியூகம்
அம்மா என்றால் நிம்மதி
அம்மா என்றால் வெகுமதி
அம்மா என்றால் தெய்வம்
அவளை என்றும் மறவாமல் உய்வோம்
அம்மா என்றால் அழகு
அவளோடு உயிருள்ளவரை பழகு.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Aug-23, 8:23 am)
பார்வை : 135

மேலே