அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்1
அம்மா
எங்களின் உள்ளம் உடைந்தது
உதிரம் உறைந்தது உந்தன்
உயிர் மூச்சு நின்றது எனும்
சேதிகேட்டு
அம்மா
பணம் படைத்தவரெல்லாம்
பணக்காரர் அல்ல
அது வெறும் காதிதம்
சுட்டெரித்தால் அது வெண்சாம்பல்
குணம் படைத்தவர்களே
பெரும் பணக்காரர்கள்
நீங்கள் நல் குணம் படைத்தவர்கள்
நல்ல மணங்களை சம்பாதித்தவர்
நீயே பெரும் பணக்காரி
அம்மா..
தமிழ்நாட்டில் ஒரு பெண் சிங்கம்
இருந்தது
வெள்ளை வேட்டிகளை
ஒரு வண்ண முந்தானை தன் கட்டுக்குள் வைத்திருந்தது
அதுபோல
நீயும் ஒரு வீரத்தாய்
எங்களுக்கு அம்மாவாக அப்பாவாக
நல் ஆசானாக இப்போது தெய்வமாக மாறி எங்கள் குடும்பத்தை கட்டிகாக்கிறாய்
மதிக்கிறோம் அம்மா உங்கள் தியாகத்தை...
.